Sunday, December 5, 2010

தட்ஸ் தமிழ் செய்தி ஊடகம் 'காவாலிகளின்' கூடாரமா?!

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துகளும், சம்பவங்களும் கற்பனை அல்ல; ஒரு சிலருடைய மனதை புண்படுத்துவதற்காகவே இந்த பதிவு எழுதப்படுகிறது.

இந்த பதிவு 'தட்ஸ்தமிழில்' பிரசுரிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்வது பற்றியது அல்ல. அத்தகைய செய்திகளுக்கு வாசகர்கள் என்ற பெயரில் ஒரு சில கருங்காலிகள் அடிக்கும் கொட்டம் பற்றியும், அவர்கள் போடும் நாகரிகமற்ற, வக்கிரமான ஆட்டங்களுக்கு 'தட்ஸ்தமிழ்' ஏற்படுத்தி கொடுத்திருக்கும் வசதிகளை பற்றியும் அதன் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவது மட்டுமே..!  "உனக்கு எதற்கு அக்கறை, ஊரில் எவனுக்கும் இல்லாத அக்கறை" என்று உங்களில் யாரோ கேட்பது காதில் விழுகிறது. 'நானே பாதிக்கப் பட்டேன். நேரடியாக பாதிக்கப் பட்டேன்' என்கிற முறையில் என்னுடைய இந்த பதிவில் வரும் கருத்துக்கள் 'சுளீர்' என்று இருக்கலாம். வார்த்தைகள் வலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.. அன்பர்கள் பொருத்தருள வேண்டுகிறேன்.

இந்த பதிவின் நோக்கம்:
நான் பல நாட்களாக 'தட்ஸ்தமிழில்' கருத்தெழுதி வரும் வாசகன். குறிப்பாக ஈழம் சார்ந்த பதிவுகளில் (ம.பொன்ராஜ்) என்ற எனது பெயரினைப் பார்க்கலாம்; அந்த கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல், சிலர் செய்த விஷமத்தனமான செயலே இந்த பதிவினை எழுதத் தூண்டியது. எனது நண்பனின் ஈமச்சடங்கில் கலந்து கொண்டிருந்த நேரம், யாரோ சிலர் எனது பெயரில் அதே நேரத்தில் பல கருத்துகளை (நான் முரண்படும் கருத்துகள் அவை) எழுதி உள்ளதை பார்த்து ஆச்சரியமும், கோபமும் கொப்பளித்தது. காரணம் இது கருத்தெழுதும் பதிவர்களிடையே காணப்படும் குறைந்த பட்ச நாகரிகத்தினையும் கேள்விக்குறியாக்குவது மட்டுமின்றி, "அது என்னுடைய கருத்து அல்ல" என்று நிராகரிக்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லாமல் போய்விட்டதே முக்கிய காரணம். (இது மாதிரி எத்தனை தடவை தாங்க நானும் 'என்னோடது இல்ல.. நான் எழுதல'ன்னு சொல்லிக்கிட்டு இருக்க முடியும்..?  :-))


குறைபாடுகள்:
1) பெரும்பாலான செய்தி ஊடகங்களில் கண்டிப்பாக கேட்கப்படும் 'மின்னஞ்சல் முகவரி' இதில் கேட்கப்படுவதில்லை. எனவே அவதூறான கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டும் வாய்ப்பு 'தட்ஸ் தமிழுக்கு' கிடையாது.

2) ஒரு வாசகரினை போல இன்னொரு வாசகர் கருத்தெழுதி 'ஏமாற்று வேலை' செய்யாமல் தடுக்க, பல செய்தி ஊடகங்கள் 'வாசகரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, சங்கேத வார்த்தை(பாஸ் வேர்டு)' போன்ற விஷயங்கள் பதிவு செய்யப் பட்டு, ஒவ்வொரு முறையும் அது சரிபார்க்கப் படும். 'தட்ஸ்தமிழில்' இந்த வழக்கமே கிடையாது. எனவே யார் வேண்டுமென்றாலும், யாருடைய பெயரிலும், (ம. பொன்ராஜ் என்ற என்னுடைய பெயரில் நீங்கள் கூட முயற்சி செய்து பாருங்கள்...!!! ஏற்கனவே பய புள்ளைங்க புண்ணியத்தால அப்படி நிறைய கருத்துகள் இன்னும் ஓடிக் கிட்டு இருக்கு....), என்ன கருத்துகளை வேண்டுமானாலும் (அது ஆபாசமாகவே, அருவருப்பாகவோ, எதிர் கருத்தாகவோ கூட இருக்கலாம்) பதிய முடியும்.  கருத்து எழுதும் பகுதியில் எந்த ஒரு ஊடகமும் தனது வாசகர்களுக்கு செய்யக் கூடாத ஒரு துரோகம் இது. இதில் 'தட்ஸ்தமிழ்' எந்த அளவிற்கு கோட்டை விட்டுள்ளது என்று பாருங்கள்?

விளைவுகள்:
1) 'இனிமே இந்த பக்கமே வரமாட்டேண்டா... அப்படி வந்தாலும் கருத்தெழுத மாட்டேண்டா....!' என்று சூடம் அணைத்து சத்தியம் செய்து வெளியேறிய நல்ல விவாதக்காரர்கள் குறைந்தது 'ஆயிரம்' பேர்.  நான் 'ஆயிரத்தில் ஒருவன்'.

2) குறிப்பாக ஈழம் சார்ந்த கருத்துகள் வரும்போது இந்த கருங்காலிகள் 'ஓவர் டைம் டியூட்டி' பார்ப்பது பலருக்குத் தெரியும். நான் உட்பட பல நபர்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தும் போது சம்பந்தப் பட்டவர்கள் "நான் அவன் அல்ல." என்று தன்னிலை விளக்கம் கொடுத்து கொடுத்தே கண்ணைக் கட்டியது தான் மிச்சம்.

தட்ஸ்தமிழ் நிர்வாகத்தாரிடம் இருந்து எதிர் பார்ப்பது:
1 )கருத்துப் பகுதியில் 'அவதூறு குறித்து தகவல் தர'  என்ற பொத்தானை எத்தனை முறை அமுக்கினாலும் அது வேலை செய்யவில்லை. கொஞ்சம் சரிபார்க்கலாமே....!!!

2 ) வாசகர்களின் தனித்தன்மை காக்க, 'பயனாளர் பெயர், மின்னஞ்சல் முகவரி, சங்கேத வார்த்தை' போன்றவற்றை பதிவு செய்து, வாசகர்கள் உள்நுழைந்த பிறகு மட்டுமே (லாக் இன்) கருத்தெழுத அனுமத்திக்க வேண்டும். இவை எதுவும் சாத்தியமில்லை என்று நிர்வாகம் கருதினால் 'கருத்து பகுதியையே' நீக்கி விடலாமே?.

3 ) கருத்துகளை நெறியாள்கை செய்யவும், அருவருக்கத் தக்க கருத்துகளை கண்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை யாவும் 'தட்ஸ்தமிழ்' மீது கொண்ட அக்கறையே அன்றி, வேறொன்றும் இல்லை பராபரமே....!!!

4) மேற்ச்சொன்னவைக்கு நிவாகம் செவிசாய்க்க தவறினால், 'தட்ஸ் தமிழின்' செய்திகள் வேண்டுமானால் நாகரிகமாக இருக்கலாம். ஆனால் அதனுடைய கருத்து பகுதி 'எச்சரிக்கை: கருத்தெழுதும் பகுதி 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும்' என்று விவரம் தெரிந்த வாசகர்கள் 'ஏ' சர்டிபிகேட் வெகு விரைவில் கொடுத்துவிடுவார்கள்.

'தட்ஸ் தமிழ்' நிர்வாகத்திற்கு நேரடியாக ஒரு மின்னஞ்சல் இது குறித்து அனுப்ப உள்ளேன். அது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில்......!!


அதுவரை வணக்கம் கூறாமல் செம 'காண்டு'டன்  விடை பெறுவது,
சுளீர்


பிற்சேர்க்கை:
'தட்ஸ்தமிழ்' வலைப் பக்கத்தை நிர்வகித்து வரும் நிறுவனத்தாருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதன் நகல் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. உங்களைப் போல நானும் அவர்களது பதிலுக்கு காத்திருக்கிறேன்.

************************
From: Ponraj Mathialagan
To:     inquiries@greynium.com
Date:  Mon, Dec 6, 2010 at 12:29 PM
Subject: Complaint about 'thats thamil' and its comments section

Hi sir/madam

I am one of the readers of 'thats thamil'. I like 'thats thamil' because of its up-to-date news and events. Comments section on every online media is vital to show the quality of the readers. Obviously comments will throw more light on the topics and should give the readers a place to have a healthy discussion too. Hope you agree with me. But I strongly disagree with 'thats thamil' on this. To be frank, if the new reader has a look at the comment page, he/she will immediately reconsider to visit 'thats thamil' again. This is not good for 'thats thamil' and its fame. Please do necessary steps to make the comments section as nice as possible and give the readers security and comments moderation as well. Please visit my blog 'http://suleer.blogspot.com' to know more details.


Regards
Ponraj M
************************

36 comments:

  1. அன்பரே !

    நாகரீகமான விவாதமென்பது அங்கே கேலிக்கூத்து . மதவாத சாதியவாத இனவாதக் கருத்துக்கள், தரம் தாழ்ந்த வார்த்தைப் பிரயோகம் எல்லாம் அங்கே அரங்கேறும் . ஏழுமலை என்பவன் இஸ்லாமிய, கிருத்துவமக்களை காழ்புணர்ச்சியோடே எழுதிவரும் பன்றி. இப்படிப்பட்ட மக்கள் நிறையவருவர் . மாற்றுவழிதான் தெரியவில்லை

    ReplyDelete
  2. நண்பரே நீங்கள் என்ன எதிர் பார்கிறீர்கள்? உங்கள் கருத்துகளுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க கூடாது.. நீங்கள் சொல்வதற்கெல்லாம் போற்றி பாட வேண்டும்? நீங்கள் சொன்ன ஏழுமலை,அரிச்சந்திரன் எல்லாரும் எப்போதும் தரமான,நாகரீகமான கருத்துக்களுடன் விவாதிப்பவர்கள்தான். உங்கள் பெயரை போலவே அவர்கள் பெயரையும் சிலர் தவறாக பயன் படுத்தியதால் தற்போது அவர்களை அங்கு காண முடிவதில்லை என்றே நினைக்கிறன். உங்களுக்கு சந்தேகமானால் மீண்டும் ஒருமுறை மதம் மற்றும் இலங்கை சார்ந்த செய்திகளின் கமெண்ட்ஸ் பாருங்கள். யார் தரப்பிலிருந்து அதிகமாக ஆபாசமான,அறிவில்லாத, மூட தனமான கமெண்ட்ஸ் உள்ளன என்று தெரியும்.நீங்கள் ஏன் உங்கள் பெயரை இங்கு அடையாளபடுத்த வேண்டும் என எதிர்பார்கிறீர்கள்? உங்களுக்கு தேவை ஆரோக்கியமான விவாதம். உங்கள் கருத்தை எந்த பெயரில் வேண்டுமானாலும் எடுத்து வைக்கலாம். நான் 2 ஆண்டுகளாக அதை தான் செய்கிறேன். எனக்கு உங்களை போலவோ அல்லது அரி,ஏழுமலை போலவோ எந்த பிரச்னையும் இல்லை. மேலும் தட்'ஸ் தமிழின் தொழில் முறையை மாற்ற சொல்ல நீங்கள் யார்? ஒரு பொருள் பிடிக்கவில்லை எனில் வாங்காதீர்கள். அது போல இது பிடிக்கவில்லை எனில் இங்கு வராதீர்கள். அதை விடுத்தது தான்தான் பெரும் அறிவாளி போல பேச கூடாது. நான் கூறியதில் ஏதும் தவறிருந்தால் தாராளமாய் எடுத்துரைக்கலாம். விவாதத்திற்கு நான் ரெடி.

    ReplyDelete
  3. மேலும் ஒரு விஷயம். நீங்கள் யாரை தூற்றுகிரீர்களோ அந்த நாட்டு இணைய தளத்தில், உங்களுக்கு பிடிக்காத அதே இணைய தளத்தில் உங்கள் சுளீர் வலை பதிவினை விளம்பர படுத்துகிறீர்களே? இதற்க்கு பெயர் என்ன தெரியுமா?

    ReplyDelete
  4. //உங்கள் பெயரை போலவே அவர்கள் பெயரையும் சிலர் தவறாக பயன் படுத்தியதால் தற்போது அவர்களை அங்கு காண முடிவதில்லை என்றே நினைக்கிறன்// தோழி பத்மா அவர்களே... இந்த பதிவு எழுதியதற்கான நோக்கம் உங்களின் இந்த வரிகளில் தெரிகிறது. தட்ஸ்தமிழ் கருத்துப் பகுதியில் 'பெயர்' என்று கேட்கப் பட்டுள்ளது. உண்மையான விவாதத்திற்கு தயாரக உள்ளவர்கள் மறைவாக நின்று கல் எறிய மாட்டார்கள். எனவே தனது பெயரை இட்டுத்தான் ஆக வேண்டும். 'பெயர்' என்று தட்ஸ் தமிழ் நிர்வாகம் கேட்டிருக்கும் பட்ச்சத்தில், எனது பெயரை அங்கு போடுவது தவறு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. 'ஒரு பொருள் பிடிக்கவில்லை என்றால் வராதே' என்று சொல்லியுள்ளீர்கள். என் மனதில் என்ன இருக்க வேண்டும், இருக்க கூடாது என்று முடிவு செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அதே போல எனது பெயரைனை மற்றவர் உபயோக்கிக்க கூடாது என்று நான் சொல்லக் கூடாது என்று சொல்லவும் உங்களுக்கு உரிமை இல்லை. 'ஆனந்த விகடன்' போன்ற ஊடகங்களில் சென்று பாருங்கள். தட்ஸ் தமிழை விட சிறந்த விவாதம் அங்கு நடக்கும். ஆனால் நாகரிக வழியில். அத்தகைய நாகரிக முறையில் தட்ஸ் தமிழ் செயல் பட கோருவது குற்றச்சாட்டு அல்ல. புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. // உங்களுக்கு பிடிக்காத அதே இணைய தளத்தில் உங்கள் சுளீர் வலை பதிவினை விளம்பர படுத்துகிறீர்களே? இதற்க்கு பெயர் என்ன தெரியுமா?//
    தோழி பத்மா... 'ம பொன்ராஜ்' என்ற என்து பெயரில் நான் கொடுத்த 'தட்ஸ் தமிழின்' யோக்கிதை என்பதை தவிர, 'சுளீர்' பற்றிய எந்த கருத்தையும் நான் தட்ஸ் தமிழில் பதியவில்லை. இது தான் பிரச்சனை தோழி பத்மா... புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. //மேலும் தட்'ஸ் தமிழின் தொழில் முறையை மாற்ற சொல்ல நீங்கள் யார்?//ஒரு வலைதளத்தை வளர்க்க நினைப்பவர்கள் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் வராது தோழி பத்மா. சொல்லுங்கள். நான் இந்த பதிவின் எந்த இடத்தில் 'தட்ஸ் தமிழை' அவர்களது தொழில் முறையை மாற்றவேண்டும் என்று கட்டாயப் படுத்தினேன்? ஒருவேளை நீங்கள் புரிந்தகொண்ட தொனி அப்படி இருந்தாலும், ஒரு பொது செய்தி ஊடகமான 'தட்ஸ் தமிழில்' கருத்து பரிமாற்றம் என்கிற முறையில் என்ன நடந்தாலும் அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு மட்டும் உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? 'அக்கறையையும், ஆதிக்கத்தையையும்' போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் தோழி பத்மா.

    ReplyDelete
  7. நன்று நண்பரே.. இங்கு நடக்கும் விவாதம் பொது மேடையில் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து அல்ல. இங்கு விவாதிக்கப்படும் கருத்து தான் முக்கியமே தவிர விவாதிக்கப்படும் நபரோ, பெயரோ அல்ல என்பது என் கருத்து. உங்கள் கருத்துகள் ஒருவரை கவரும் பட்சத்தில் அவரிடமிர்த்து எதிர்த்தோ,ஆதரித்தோ கருத்து வரும். அது தான் இங்கு தேவை. சொல்பவர் யார் என்பது அல்ல. கண்டிப்பாக நான் உங்கள் உரிமையில் தலை இடவில்லை. என் கருத்தின் நோக்கம் எப்படி உங்கள் உரிமையில் அடுத்தவர் தலை இட முடியாதோ அது போன்று தட்ஸ்தமிழின் தொழில் முறையில்மாற்றம் செய்ய நீங்க கோர முடியாது. ஆனந்தவிகடன் செய்வது அவர்களது உரிமை. அது உங்களுக்கு பிடிதிரிக்கிறது. இது உங்களுக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் தட்ஸ் தமிழ் மாறவேண்டுமா நண்பரே? எனது பெயரைனை மற்றவர் உபயோக்கிக்க கூடாது என்று நான் சொல்லக் கூடாது என்று சொல்லவும் உங்களுக்கு உரிமை இல்லை என்ன கூறி உள்ளீர்கள். அது உங்கள் உரிமைதான். ஆனால் எங்கு, எந்த இடத்தில் என்பது முக்கியம். உங்கள் பொருளை உங்கள் வீட்டில் வைதிருப்பதுக்கும், முச்சந்தியில் வைத்து விட்டு பேசுவதுக்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள். தட்'ஸ் தமிழ் பொது இடம். ஆனந்த விகடன் நீங்க வாடகைக்கு எடுத்த ஹோட்டல் ரூம். சுளீர் உங்கள் வீடு. மூன்றுமே உலகில் தேவை. இதில் ஒன்றை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவரவர் தகுதிக்கும், தேவைக்கும் தகுந்தட்போன்று அந்த இடங்களை பயன் படுத்தும் மக்கள் உலகில் உண்டு. வித்தியாசம் புரிகிறதா நண்பரே?

    ReplyDelete
  8. தட்ஸ்தமிழ் பெயர் கேட்க்கும். ஆனால் நான் பெயர் எழுதக் கூடாது. எழுதினால் அதற்க்கு ஏற்ப்படும் பிரச்சனைகளுக்கு நானே பொறுப்பு. யார் வேண்டுமானாலும், எனது பெயரைப் பயன்படுத்தி எவ்வளவு அருவருப்பான கருத்துகளை வேண்டுமென்றாலும் வைக்கலாம். அதற்கு 'உன் பெயர் என்ன' என்று கேட்ட தட்ஸ் தமிழ் பொறுப்பேற்காது. அப்படி என் பெயரை தவறாக உபயோக்க்ப்போரினை கண்டிக்கும் குறைந்தபத்ச்ச உத்திரவாதத்தை கூட தட்ஸ்தமிழ் செய்யாது. -- இப்படி வாதம் செய்யும் தோழி பத்மா அவர்களே... நான் தெரியாமல் தான் கேட்கிறேன். 'ஓசியில் விற்கிறேன் என்று ஒருவர் மினரல் வாட்டர் விற்கிறார். ஓசியில் கிடைத்ததே என்று ஒருவர் அதை வாங்கி குடிக்கிறார். இறுதியில் அந்த மினரல் வாட்டர் விஷமேறி இருந்ததால் குடித்தவர் இறக்கிறார். இதை விசாரிக்கும் நீதி மன்றம் "நீ ஏன் வாங்கி குடித்தாய். அது உன் தப்பு." என்று குடித்தவர் மீது குற்றம் சொல்லுமா? 'ஓசியிலேயே கொடுத்தாலும், விஷத்தை கொடுத்ததால் கொடுத்தவரை நீதி மன்றம் விட்டுவிடுமா?'.... இதனை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன் தோழி. பத்மா...!!! மீண்டும் சொல்கிறேன்... 'தட்ஸ் தமிழ்' மீது நான் கொண்டுள்ளது 'அக்கறையே'.... பதிவை மீண்டும் படித்தால் அது உங்களுக்கு புலப்படும்...!!!

    ReplyDelete
  9. இன்றும் நீங்கள் ஒருமுறை தட்ஸ் தமிழுக்கு முழுவதுமாக வந்த பின்னூட்டங்களை படியுங்கள் பத்மா. 'பெயர்' என்கிற விஷயத்தை தாண்டி, குறைந்த படச நாகரிகத்துடனாவது தட்ஸ் தமிழ் கருத்துப் பகுதி இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? அதற்க்கு நெறியாள்கை வேண்டுமென்று நினைப்பது தவறா? ...சுருக்கமாக சொல்லப் போனால் 'இலவச பொது கழிப்பிடம்' சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? 'அது அப்படி தான் இருக்கும். நீ உன் வேலையை பார்' என்றால் 'உண்மையில் அது போன்ற பின்னூட்டங்களை எதிர் பார்த்து தான் தட்ஸ் தமிழ்' இயங்குகிறதோ என்று சாமானியன் நினைப்பதில் என்ன தவறு? பிறகு எப்படி அவன் மீண்டும் தட்ஸ் தமிழுக்கு வருவான்? 'தட்ஸ் தமிழை' எப்படி அடுத்த நிலைக்கு எடுத்து செல்லலாம் என்ற மன நிலையுடன் மேற்ச்சொன்ன கேள்விகளை அசைபோடுங்கள்...!!!

    ReplyDelete
  10. நண்பர்களே

    எழுமலை என்ற பெயரில் எழுபவன் உண்மை பெயரை பார்த்தல் அது ஒரு அய்யர் பெயராகத்தான் இருக்கும் என்று சத்தியம் செய்து சொல்கிறேன் ஏனென்றால் இந்த பிராமண பதர்கள் என்றுமே தமிழர்களின் விரோதிகள் இவர்களுக்கு தமிழனின் ஈழ விடுதலை பிடிக்காது , பிரபாகரனை மட்டமாக பேசுவார்கள், மொத்தத்தில் தமிழில் பேசி பிழைத்துக்கொண்டு தமிழனுக்கு துரோகம் செய்வதுதான் பெரும்பாலான பிராமணர்களின் வேலை ( உதாரணதிற்கு இந்து ராம் , துக்ளக் சோ , சுப்ரமணிய சாமி , காஞ்சி சங்கர மட கொலைகாரர்கள் , மற்றும் நம்மிடையே உலவும் பிராமணர்கள், இவங்களிடம் ஈழ போர் நேரத்தில் உரையாடியதில் இவங்களின் குள்ளநரி குணம் வெளிப்பட்டது, தமிழர்களின் துயரத்தில் ஒரு துளி கூட வருத்தபடாமல் புலிகள் தோற்றதில் மகிழ்ச்சி அடைந்தர்வர்கள் இந்த ஒட்டுண்ணிகள், ( பிராமணர்களில் சில நல்லவர்களும் உண்டு என்பதை மறுக்கவில்லை ), இவர்களுக்கு தமிழன், முஸ்லிம், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகாது, இவங்கள் இந்தியா முழுதும் ஒரு ஆறு சதவிகிதம் தான் இருப்பார்கள் ஆனால் தங்கள் குள்ள நரி புத்தியால் எல்லா துறைகளிலும் நுழைந்து மட்ட்ரவர்களை ஆட்டி படிக்கின்றனர், இதெல்லாம் தந்தை பெரியார் எடுத்து சொல்லியதால் தமிழக மக்கள் இட ஒதுக்கீடு கிடைத்து முன்னேறி உள்ளனர் என்றாலும் இன்னும் எல்லா மக்களுக்கும் இவர்களை பற்றி புரிவதில்லை, ஆகவே தமிழனுக்கும் முஸ்லிமுக்கும் எதிர் கருத்துக்களை எழுதுபவன் இந்த தமிழர்கள் விரோதி என்று தெரிந்து கொள்ளவும்.

    ReplyDelete
  11. :-) முழுக்க தவறான வாதம். முதலில் நீங்கள் இருப்பது இன்டர்நெட்டில் வணிகம் செய்யும் ஒரு செய்தி தளத்தில். அவரவர் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் செய்தியை படித்து விட்டு அவரவர் கருத்துக்களை பதிந்து விட்டு போய்விடுவர். அவ்வளவே. கருத்தை எழுதுங்கள் என்பதன் அர்த்தம் இங்கு ஆரோக்கியமாக விவாதியுங்கள் என்பது அல்ல. சினிமா,டிவி போல பொழுது போக்கவும், அவரவர் மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து மன அழுததை குறைக்கவும் இதையும் ஒரு வழியாக பயன் படுத்துவோர் பலர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. நீங்க சொல்வது போல உயிரிழப்பு என்றெல்லாம் பேச சீரியஸ் ஆனா விஷயம் கிடையாது இந்த கமெண்ட்ஸ். எப்படி உலகில் ஊனமுற்றோர், பலசாலி, ஏழை, பணக்காரன்,கோழை,வீரன் என பலதரப்பட்ட மக்கள் உள்ளனரோ அனைவருக்கும் சம உரிமை இந்த உலகில் உள்ளதோ அது போன்று இது ஒரு வகை ஊடகம், ஒருவகை பொழுதுபோக்கு இங்கு இதை பிடித்து வருவோர் வந்து படிப்பர். பிடிக்காதோர் வரமாட்டோர். மிகவும் லேசான விசயத்தை லேசாக மட்டும் அணுகுங்கள். வாததிட்க்காக எடுத்துக்காட்டுகளை தயார் செய்யாதீர்கள்.மேலும் எனக்கு வாதம் பிடிக்காது. விவாதிக்க மட்டுமே வருவேன். தட்'ஸ் தமிழ்க்கு அதன் மீதான அக்கறையால் நீங்கள் சொன்ன ஆலோசனை தேவையற்றது... பொது இடத்தில் என் பெயரை யாரும் பயன் படுத்த கூடாது அதற்கான வழி செய் என நீங்கள் கோருவது கேலி கூத்தாக மட்டுமே முடியும் என நான் கருதினேன்.கருதியதை ஆரோக்கியம்மான முறையில் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அவ்வளவே..!

    ReplyDelete
  12. ஒரு பொருளில் குறை இருக்கின்றது எனக்கு கூற உரிமை இல்லை, மேலும் அதை நான் அடுத்தவரிடம் சொல்வதற்கும் உரிமை இல்லை என்கின்றீர்களே பத்மா, இது தான் நீங்கள் நுகர்வோருக்கு கொடுக்கும் மரியாதையா?

    ஒரு தவறு நடந்துவிட்டால், முதலில் அதை ஒப்புக்கொள்ளவேண்டும், அந்த தவறினால் பாதிக்கப்பட்டவரின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும், பின்னர் அந்த தவறை எப்படி சரி செய்து, பிற்காலத்தில் இதே தவறு வரக்கூடாது என்பதை பார்ப்பவர் தான் வளர முடியும். அப்ப‌டி எல்லாம் நான் நினைக்க‌மாட்டேன் என் த‌வ‌றை சுட்டி காட்டுவ‌தே த‌வ‌று என்ப‌து ச‌ர்வாதிகாரிக‌ள் செய்யும் வேலை. நீங்க‌ள் ச‌ர்வாதிகாரி இல்லை என‌ நான் நினைக்கின்றேன்.



    ந‌ட்புட‌ன்
    வெங்க‌டேச‌ன் ப‌ழ‌னி

    ReplyDelete
  13. I've so much to say in short time that typing in Tamil is not possible.. Sorry.

    You all seem genuinely concerned about Tamil Nadu and from they way you exchange your opinions, are educated and relatively responsible Indian citizens or expatriates.

    All us are fed up with what's happening in TN. Be it the incompetent and corrupt politicians, or lack of true democracy or the utter failure of duties to our Tamil fraternity in Lanka (BTW, I'm no tiger sympathizer, nor do I lament passing away of VP).

    There is little that people living within TN do, without risking their lives. People like Cho.Ramasamy, who provide the most reasonable voice while risking their lives for people are few.)

    All leaders, starting from Mk, Jaya, Vaiko, Ramadoss, Vijayakath and the plethora of leaders not worth mentioning (Thiruma, Dr.Krishnasamy, etc,etc) have proved to be dubious, desite showing some early promise in their careers. The national parties such as congress and bjp are equally corrupt. So a change can not come from one person. Any one person will eventually lose the drive for change, succumbing and compromising to the realities of politics.

    TN is a land of great Cholas, pandiyas, valluvar and avvayar. It belongs to all of Tamilians , in india , Lanka or elsewhere. We should feel the same way Jews feel about their holy land. So Change has to be come from people and from people who are not politicians, for it to succeed. I'd call you to put your energy constructively to bring change, than feeling emotional about politically oriented and 3rd quality sites such as Thats tamil.

    Please share your thoughts. The sparks for the wild fire called change can start here.

    ReplyDelete
  14. தவறு என்று எதை சொல்கிறீர்கள் வெங்கட்? தட்'ஸ் தமிழ் செய்திகளையா அல்லது கமெண்ட் பகுதியா அல்லது எந்த கட்டு பாடுமின்றி சுதந்திரமாக நல்லது,ஆன்மிகம்,செய்தி,விளையாட்டு,கேலி,கிண்டல்,ஆபாசம்,வக்கிரம்,குமுறல், எதிர்பார்ப்பு என மனதில் உள்ள அனைத்தையும் யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி கொட்டி தீர்க்கும் நம் நண்பர்களையா அல்லது அதை படிக்க எனவே வரும் தோழர்கலையா? இங்கு இப்படி கமெண்ட் அடிக்கும் நீங்கள் அங்கு எப்படி கமெண்ட் அடிப்பீர்கள் என யாருக்கும் தெரியாது. திரைப்படங்கள் எப்படி U சான்றிதழ் ஆரம்பித்து நீல படங்கள் வரை அவரவர் ரசனைக்கும் தகுதிக்கும் ஏற்ப உள்ளனவோ அது போல இது ஒரு வகை. இதற்கென ரசிகர்கள் உள்ளனர். அவர்களும் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள மனிதர்கள்தாம்,அவர்கள் யாரும் தவறானவர்கள் இல்லை. இங்கு கமெண்ட் அடிப்பதாலோ அதை படிப்பதாலோ யாருக்கும் ஏதும் நேர்ந்து விடாது. இது சிலருக்கு மனபாரத்தை குறைக்கும் ஒரு பொழுது போக்கு. அவ்வளவே. யாரெனு இதால் பாதிக்க பட்டால் அது தவறு. ஆனால் இதனால் யாரும் பதிக்க பட மாட்டார்கள். அப்படி பாதிக்க படுகிறேன் என யாரவது கூறினால் அது ஏமாற்று வேலை. ஏனெனில் பாதிக்க படுவோர் மீண்டும் அங்கு போக மாட்டார்கள். அவர்கள் அங்கு போகவில்லை எனில் அவர்களுக்கு பாதிப்பில்லை. குறை இருந்தால் குறை கூறலாம். சண்டை படத்தில் சண்டை காட்சிகளை மாட்டும் எதிர்பார்த்து போங்கள். அதில் காதல் காட்சி சரி இல்லை என்றால் அது உங்கள் தவறு. இங்கு நம்மால் விவாதிக்கப்படும் பிரச்சனையின் வீரியத்தையும், என் கருத்துகளின் நோக்கத்தையும் சரியாக புரிந்து கொண்டீர்களானால் நான் சர்வாதிகாரியா இல்லையா என்பது உங்களுக்கே புரியும் நண்பரே :-)

    ReplyDelete
  15. Hey Mani what are you blabberring? When did cho.Ramasamy risked his like to provide a favourable news to Tamils? you are not a tiger sympathizer even after watching the singala attrocities on the video? after all the SLA cruelty to the Tigers? after they killed all the white flag wavering people indescriminately?
    you are not a Tamil then, I wouldn't consider even a normal human. Get lost idiot.

    ReplyDelete
  16. வணக்கம் சுளீர்

    கருத்து சொல்ல வரல நண்பரே ஆனால் உங்கள் கருத்துக்கு நான் உடன்பட உங்கள் கருத்தில் ஆழமோ ஒரு அழமான பாதிப்போ இல்லை நண்பரே !

    ஒரே ஒரு ஒற்றுமை சில கோபங்கள் மட்டுமே !!!

    விடுங்க பாஸ் எப்படியோ உங்க கனவு வெற்றி போல நானும் சுளீர் ல பின்னூட்டம் போட்டுட்டேன் .

    ReplyDelete
  17. //அவ்வளவே. கருத்தை எழுதுங்கள் என்பதன் அர்த்தம் இங்கு ஆரோக்கியமாக விவாதியுங்கள் என்பது அல்ல//நீங்கள் தவறான வலை தளத்திற்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் தோழி பத்மா.

    ReplyDelete
  18. //அப்படி பாதிக்க படுகிறேன் என யாரவது கூறினால் அது ஏமாற்று வேலை. ஏனெனில் பாதிக்க படுவோர் மீண்டும் அங்கு போக மாட்டார்கள். அவர்கள் அங்கு போகவில்லை எனில் அவர்களுக்கு பாதிப்பில்லை//முதலில் இந்த பதிவு போடுவதற்கான ஒரு முக்கிய காரணத்தை சொல்லிவிடுகிறேன் தோழி பத்மா. 'நீயா இப்படி வக்கிரமாக எழுதுகிறாய்? உன் மேல் இருந்த மதிப்பு போய்விட்டது பொன்ராஜ்' என்று எதேச்சையாக 'தட்ஸ் தமிழை' புரட்டிய என் நண்பன் கூறிய பிறகு, 'அது நான் அல்ல. அந்த பதிவு இட்டப் பட்ட நேரத்தில் நான் ஈமக்கிரியை' ஆற்றிக் கொண்டிருந்தேன் என்று அவனுக்கு புரிய வைக்க வேண்டியிருந்தது. மேலும் 'சதா அதா நான் அல்ல' என்று சொல்லி நோவு வந்தது நான் மிச்சம். அதன் பாதிப்பே இந்த பதிவு. இது வரை இது போல நொந்த தோழர்கள் யாரும் இப்படி பதிவு போட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இதுவே முதல் முறை என்று இருப்பதால் தானோ, நீங்கள் இங்கும் வந்து 'தட்ஸ் தமிழின்' கருத்து பகுதி கண்ணியம் வாழ்க என்று கோசம் இடுகிறீர்கள்.

    ReplyDelete
  19. //விடுங்க பாஸ் எப்படியோ உங்க கனவு வெற்றி போல நானும் சுளீர் ல பின்னூட்டம் போட்டுட்டேன் // இந்த பதிவின் நோக்கம் அதுவல்ல 'வேங்கை' அவர்களே... 'தட்ஸ் தமிழை' பொறுத்த என் ஆதங்கங்களும், எனது பெயரில் வந்த அவருவருப்பான கருத்துகள் சார்ந்த தன்னிலை விளக்கமும் மட்டுமே.

    ReplyDelete
  20. தோழி பத்மா அவர்களுக்கு ஒரு செய்தி. 'ஆனந்த விகடன்' போன்ற ஊடகங்களிலும் வாசகர் அல்லாதவரும் கலந்து கொள்ள பல தினசரி செய்தி பதிவுகள் 'தட்ஸ்தமிழை' போலவே வெளிவருகின்றன. ஆனால் அவற்றில் 'தட்ஸ்தமிழை' போல வக்கிரமான, மனிதனுக்குள் இருக்கும் மிருகத்துக்கு தீனி போடும் பதிவுகள் ஒன்று கூட இருக்காது. காரணம் இந்த பதிவில் சுட்டிக் காட்டப் பட்ட குறைபாடுகள் எதுவும் அங்கு கிடையாது. அதே போல தப்பி தவறி ஏதேனும் முகம் சுளிக்க வைக்கும் பதிவு வந்துவிட்டால் அதனுடைய வாசர்களே அதனை கண்டிப்பார். அதுவும் உடனே நீக்கப் பட்டுவிடும். நெட்டில் பலான வலை தளங்கள் நிறைய உள்ளன. அவற்றிலும் கட்டுப் பாடின்றி தட்ஸ் தமிழ் போலவே பின்னூட்டங்கள் இடப் படும். 'தட்ஸ் தமிழ்' அது போன்ற வலைத் தளமாக இருக்க வேண்டுமா? அல்லது 'விகடன்' போன்ற வலைத் தளமாக இருந்தால் நன்றாக இருக்குமா? நீங்களே சொல்லுங்கள்....!!!

    ReplyDelete
  21. விவாதம் கருத்துகளை பற்றியே, எந்த‌ தொந்த‌ர‌வும் இல்லாம‌ல் இருந்திருந்தால் சுளீர் இப்ப‌டி ஒரு ப‌திவையே எழுதியிருக்க‌ மாட்டார். தொந்த‌ர‌வு என்று க‌ருதியதால் தான் நாங்க‌ள் உங்க‌ளுக்கு பின்னூட்ட‌ம் அளிக்கின்றோம். இல்லை என்றால் தோழி.ப‌த்மாவுக்கு பின்னுட்ட‌ம் அளிக்க‌ வேண்டும் என‌ எங்க‌ளுக்கு ஒன்றும் வேண்டுத‌ல் கிடையாது. மேலும் நாங்க‌ள் ஏதோ இர‌ண்டு க‌ருத்துக‌ளை கொண்டிருப்ப‌தாக‌ உங்க‌ள் பதிவு ///இங்கு இப்படி கமெண்ட் அடிக்கும் நீங்கள் அங்கு எப்படி கமெண்ட் அடிப்பீர்கள் என யாருக்கும் தெரியாது.///// கூறுவ‌து முற்றிலும் அப‌த்த‌மான‌து...எந்த‌ ஆதார‌த்தை வைத்துக் கொண்டு இதை கூறுகின்றீர்க‌ள்?


    அப்ப‌டியானால் உங்க‌ள‌து பின்வ‌ரும் க‌ருத்துப்ப‌டி த‌ட்ஸ் த‌மிழ் க‌ருத்து ப‌குதி ந‌ண்ப‌ர்.சுளீர் கூறிய‌து போல "ப‌தினெட்டு வ‌ய‌திற்கு மேல்" என‌ எச்ச‌ரிக்கை செய்ய‌ வேண்டிய‌து தானே. இந்த‌ தொழில் நுட்ப‌ கால‌த்தில் ப‌தினெட்டு வ‌ய‌திற்கு கீழ் உள்ள‌வ‌ர்க‌ள் தான் உங்க‌ள் த‌ள‌த்தை பார்க்கின்றீர்க‌ள் என‌ நீங்க‌ள் க‌ருதுகின்றீர்க‌ளா?

    இப்பொழுது தோழி.ப‌த்மாவின் பெய‌ரால் த‌வ‌றான‌ க‌ருத்து த‌ட்ஸ் த‌மிழில் எழுத‌ப்ப‌ட்டால் அது உங்களை பாதிக்காது என‌ நீங்க‌ள் உறுதியாக‌ கூற‌முடியுமா?

    மேலும் உங்க‌ள் விவாத‌த்தை உங்க‌ளுக்கு தெரிந்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் யாராவ‌து ப‌டித்து பார்த்து விட்டு அவ‌ர்க‌ள் உங்க‌ளுக்கு கூறுவார்க‌ள் நீங்க‌ள் ச‌ர்வாதிகாரியா இல்லை என்று?

    ReplyDelete
  22. தட்ஸ்தமிழ் பொதுஇடம் என்றே வைத்துக்கொள்வோம்.
    பொதுஇடத்தில் நாகரிகம்தேவையில்லையா?

    ReplyDelete
  23. அன்பு நண்பர்களே..இதோ உங்கள் நண்பன் அரிச்சந்திரன் இங்கும். நானும் சரி நண்பர் ம. பொன்ராசு அவர்களும் thats Tamil இணையத்திற்கு புதிதல்ல. பல ஆண்டுகளாகவே எங்கள் கருத்துக்களை எங்கள் நிலையில் இருந்து எங்களின் கண்ணோட்டத்தில் பதிவு செய்து வருகிறோம். Thats Tamil இணையத்தில் கருத்து பதிவு செய்யும் அன்பர்களுக்கு நன்றாகவே தெரியும் என்னுடைய ஈழ சம்பந்தமான விடயங்களுக்கு பதில் கருத்துப் பதியும் புண்ணியவான்கள் தூசணத்தை மட்டுமே மழையாக பொழிவார்கள். இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக இதுவே நடைமுறை.இவ்வளவு வருடங்களாக காது கொடுத்து கேட்க முடியாத அர்ச்சனைகள் எல்லாவற்றையும் கண்டுக் கொள்ளாத நண்பர் ம. பொன்ராசு அவர்கள் தன்னுடைய பெயரை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தியவுடன் கொதித்தெழுந்து மகாத்மாவாக உருவெடுத்து thats tamil இணையத்தின் கருத்துப் பதிவை "நாகரீகமற்ற வக்கிரமான" என்று கடுமையான வார்த்தைகளால் சாடி சுய தம்பட்டம் அடிக்கிறார். ஏன் இவ்வளவு நாட்களாக என்னுடைய ஈழம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பதிலிட்ட கண்ணியவான்களின் கருத்துக்கள் மட்டும் இவருக்கு ஏன் இனித்தது. அப்போதெல்லாம் Thats தமிழ் இணையத்தை சாடாத நண்பர் இப்பொழுது திடீரென்று "நாகரீகமற்ற வக்கிரமான" என்று சாடுவது அவரின் சொந்த சுய லாபத்திற்கே. எனக்குத் தெரிந்த வரை நண்பர் ம. பொன்ராசு அவர்களின் பெயரை இரண்டொரு நாட்கள் மட்டுமே போலிகள் உபயோகித்தனர். ஆனால் என்னுடைய பெயரை பல மாதங்களாக போலி கண்ணியவான்கள் உபயோகித்தனர். இவற்றை எல்லாம் நான் கண்டுக் கொள்வதில்லை. சகோதரி பத்மா அவர்கள் சொல்லியது போல இணையதளத்தில் பெயர் எனபது முக்கியமல்ல. என்ன கருத்து இடுகிறோம் என்பது மட்டுமே முக்கியம். உங்கள் பெயரை மற்றவர்கள் உபயோகிக்கக்கூடாது என்று என்ன காப்புப் பதிவா செய்திருக்கிறீர்கள்?

    ReplyDelete
  24. நண்பர் அரிச்சந்திரன் அவர்களே,
    இந்த பதிவு சுய தம்பட்டம் அடிக்க அல்ல. அது எனக்கு தேவையும் அல்ல. இது 'ஈழம்' போன்று கருத்தொற்றுமை சார்ந்த பிரச்சனை அல்ல. தனி மனித அடையாளம் பற்றியது. மேலும் இது தன்னலம் என்ற குறுகிய கண்ணோட்டத்தோட எழுதப் படவில்லை. அப்படி இருந்தால் 'தட்ஸ் தமிழ்' எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்றோ, உங்களைப் போன்ற விவாதக் காரர்களுக்காகவோ நான் இந்த பதிவை போட்டிருக்கவோ மாட்டேன். வெறுமெனே 'எனது பெயரை மற்றவர்கள் உபயோக்கிறார்கள்' என்று மட்டும் பதிவை போட்டுவிட்டு சென்றிருப்பேன். 'ஏன் அப்போது கேட்கவில்லை?' என்று நீங்கள் கேட்கவில்லை. முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். நான் 'தட்ஸ் தமிழில்' பல காலமாக வாசகனாக இருக்கேன். ஆனால் அவ்வப்போது மட்டுமே கருத்தெளுதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டது போல சில நாட்களாக பெயர் மாற்றத்தினால் உங்களைப் போல பாதிக்கப பட்டுள்ளேன். நிற்க. ஆனால் பல காலமாக பெயர் போலித்தனத்தால் பாதிக்கப் பட்ட நீங்கள் இதுவரை அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? பாதிக்கப் பட்ட உங்களைப் போன்றவருக்கு குரல் கொடுக்கவே இந்த பதிவு எழுதப் பட்டது போல, இன்று நான் உட்பட பலர் பாதிக்காத அளவிற்கு நீங்கள் ஆரபத்தில் இருந்து இன்று வரை எடுத்த முயற்சிகள் என்ன? 'இது நான் அல்ல' என்று மட்டும் கருத்தெழுதி நீங்கள் ஒதுங்கி இருப்பின், 'கருங்காலிகள் களையப் படவேண்டும்' என்ற இந்த பதிவின் நோக்கம் குறித்து சந்தேகம் வருவது ஏன்?

    ReplyDelete
  25. //சகோதரி பத்மா அவர்கள் சொல்லியது போல இணையதளத்தில் பெயர் எனபது முக்கியமல்ல. என்ன கருத்து இடுகிறோம் என்பது மட்டுமே முக்கியம். உங்கள் பெயரை மற்றவர்கள் உபயோகிக்கக்கூடாது என்று என்ன காப்புப் பதிவா செய்திருக்கிறீர்கள்//இப்படி கருத்து வைத்திருக்கும் நீங்கள் 'ஐயோ எனது பெயரை ஈழ ஆதரவு கருங்காலிகள் கெடுத்துவிட்டார்களே. ஏம்ப்பா பொன்ராசு அது பற்றி இதுவரை ஏதாவது கேட்டியா?' என்று என்னை நோக்கி விரலை சுட்ட எப்படி முடிந்தது உங்களா நண்பர் அரிச்சந்திரன்? "கண்டவன் எனது பெயரை உபயோக்கிறான். அதை நீ கேட்டியா?" என்று முதலிலும், "கண்டவன் எனது பெயரை உபயோகித்தாலும் கருத்து மட்டுமே முக்கியம்" என்று இரண்டாவதாகவும் சொல்லியுள்ளீர்கள் நண்பர் அரிச்சந்திரன். 'கருத்து மட்டுமே முக்கியம்' என்றால் உங்கள் பெயரை களவாடியவர்கள் குறித்து என்னிடம் நீங்கள் முறையிட வேண்டிய அவசியம் என்ன? உங்கள் கருத்துடன் நன்றாகவே முரண்படுகிறீர்கள். காப்புரிமை என்ற பெரிய வார்த்தை தேவை இல்லை நண்பா. மிக எளிய வழியே போதும். அதுவும் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது. அது இருந்திருந்தால் 'அரிச்சந்திரன்' என்ற பெயரில் வந்தால் அதில் விஷயம் இருக்கும் (கவனிக்க: விஷயம், கழிவு அல்ல) என்று பெயரைப் பார்த்தமாத்திரத்திலேயே வாசர்களுக்கு தெரிந்திருக்கும். 'ஏன் இப்போது பதிவு போட்டிருக்கிறாய். இது சுயநலம்' என்பது உங்கள் எண்ணம். 'இப்போதாவது போட்டேன்னே. உங்களை போன்றவர்களுகாகவும் சேர்த்து' என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  26. Hi suleer,

    As you said thatstamil is one of my favorite website too. I used to read comments as it was readable previously. But nowadays its becoming worst that not able to read at all. I visit thatstamil when I am very much stressed with my work at office. That doesn't mean I don't concentrate on my work :) So while seeing such disgusting comments I feel pity on the people who commented like that. If u take some 10 people who commented indecently 1 or 2 among them will be educated people. This is psychological problem with some people that they are good with the society at the same time when they get chances to exhibit their original character.... they do it without hesitation.... nowadays I don't read comments and I keep window minimized to avoid seeing comments.....

    Senthil

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. அன்பு நன்பரே, உங்களின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.. நான் பல வருடங்களாக தட்ஸ்தமிழ் இனையதளத்தை படித்து வரும் வாசகன்.. அங்கு கமென்ட் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை கண்டு பலமுறை மன உளைச்சல் கொண்டிருக்கிறேன்.. 2 வருடத்திற்க்கு முன்பு ஒரு நாள் எனக்கு வந்த கோபத்தை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை, இனிமேல் தட்ஸ்தமிழ் இனையத்தில் கருத்து பகுதி ஒன்று இருக்க கூடாது என்று முடிவு செய்து "கரடி பொம்மை" என்ற ஒரு வாசகர் பெயரில் சில பலான கதைகளை தொடர்ந்து ஒரு நாளைக்கு 20 முறை அனைத்து செய்திகளின் கருத்துப்பகுதியிலும் வெளியிட்டேன், அதன் விளைவு தட்ஸ்தமிழ் ஆசிரியர் கருத்து பகுதிகளை சில நாட்களுக்கு தடை செய்து வைத்திருந்தார், அன்றே தட்ஸ்தமிழ் ஒரு அறிக்கையும் வெளியிட்டது அந்த அறிக்கையின் இறுதியில் "அன்பு வாசகர்களே எங்களுக்கு இடையூறு விளைவிக்கும் உங்களுக்கும் எங்களால் இடையூறு விளைவிக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்று மிரட்டல் கல‌ந்த கெஞ்சலில் அந்த அறிக்கை இருந்தது..

    பிறகு சில நாட்கள் கழித்து வழக்கம்போல கருத்து பகுதிகளை மடைதிறந்து விட்டார்கள்.. பிறகுதான் எனக்கு ஒரு உண்மை தெளிவாகப்புரிந்தது, "தட்ஸ்தமிழ் என்பது வியாபார நோக்கத்துடன் நடத்தப்படும் ஒரு இனையபத்திரிக்கை" . அவர்கள் இதுபோன்ற கருத்து பகுதியை மடைதிறந்து விடுவதன் நோக்கமே அவர்களுக்கு "தொடர் வாசகர்கள்" வரவேண்டும் என்பதே, இதில் நான் என் மள உளைச்சலின் காரணமாக எனக்கு தெரியாமலேயே தட்ஸ்தமிழை வளர்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதே.. அன்றிலிருந்து தட்ஸ்தமிழில் கருத்து எழுதுவதை சுத்தமாக நிறுத்திக்கொண்டேன்.

    அரிச்சந்திரன், பொன்ராஜ்‌ போன்றவர்கள் எழுதும் கருத்துக்களுக்கு ஆதரவாக நாமும் கருத்து எழுத வேண்டும் என்று என் மனம் பலமுறை சொல்லியதுன்டு ஆனால் இன்று வரை எழுதவில்லை.. எதற்க்காக நாம் தட்ஸ்த‌மிழ் இனையத்தை வளர்த்துவிட வேண்டும், இதைவிட ஆரோக்கியமான இனையதளத்தை உருவாக்கி பன்புள்ள வாசகர்களின் ஆரோக்கியமான விவாதத்தை அரங்கேற்றலாமே. அதைவிட்டு விட்டு எதற்க்காக தட்ஸ்தமிழின் வாலை பிடித்து நாம் தொங்க வேண்டும்.. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களின் வியாபாரத்திர்க்கு மறைமுகமாக உதவுகிறோம் என்பதே உன்மை...

    ReplyDelete
  29. //எதற்க்காக நாம் தட்ஸ்த‌மிழ் இனையத்தை வளர்த்துவிட வேண்டும், இதைவிட ஆரோக்கியமான இனையதளத்தை உருவாக்கி பன்புள்ள வாசகர்களின் ஆரோக்கியமான விவாதத்தை அரங்கேற்றலாமே//என் நண்பனுடன் நான் விவாதிக்கும் போதும் இதே கருத்தையே முன்வைத்தேன் தோழர் அன்பு அவர்களே....! பல இணைய செய்தி ஊடகங்களை அவருக்கு பரிச்சியம் உண்டு. மேலும் தானே ஒரு வேர்ட்பிரஸ் பக்கத்தையும் பல வருடங்களாக எழுதி வருகிறார். அவர் சொன்ன ஆலோசனை "பரவலாக இணைய வாசகர்கள் செய்திகள் என்றதும் நினைவுக்கு வருவது" (கவனிக்க: செய்தி... கருத்து அல்ல) 'தட்ஸ் தமிழ்' என்று கூறினார். அதற்க்கு ஆதாரமாய் எந்தெந்த மற்ற இணையத் தளங்களில் 'தட்ஸ் தமிழ்' பற்றி லின்க்குகள் கொடுக்கப் பட்டுள்ளது என பட்டியலிட்டார். 'யாரும் கண்டுகொள்ளாத ஒரு வலை தளத்தை எவரும் வளர்த்து விட மாட்டார்கள்'.... ஆனால் என் அறிவுக்கு எட்டியவரை 'தட்ஸ் தமிழ்' பத்தோடு பதினொன்று அல்ல.

    ReplyDelete
  30. // "கரடி பொம்மை" என்ற ஒரு வாசகர் பெயரில் சில பலான கதைகளை தொடர்ந்து ஒரு நாளைக்கு 20 முறை அனைத்து செய்திகளின் கருத்துப்பகுதியிலும் வெளியிட்டேன்,//தவறு செய்தவனை விட, தவறு செய்ய தூண்டியவனுக்கே அதிக தண்டனை. தோழர் அன்பினை 'கரடி பொம்மை' என்ற பெயரில் ஆபாசமாக எழுதத் தூண்டிய 'தட்ஸ் தமிழுக்கு' என்ன தண்டனை?

    ReplyDelete
  31. Dear Senthil Bro,
    I agree with you. If 'thats thamil' declares that it is open to vulgar comments ,not a nice place to have healthy debate and it is their one of the business tactics to get wider audience coverage, then who cared about 'thats thamil'?

    ReplyDelete
  32. இந்த செய்தி அரிச்சந்திரன், ஏழுமலை உள்ளிட்ட நண்பர்களுக்கும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். இது உறுதிப் படுத்தப் படாத தகவல். (மிகைபட்டதாக கூட இருக்காலாம்). 'சிங்கள உளவுத் துறை'யின் வேலைத் திட்டத்தில் ஒன்று இணையத்தில் பொதுவாக 'ஈழ' ஆதரவு கருத்து விவாதம் நடக்க கூடாது என்பதும்,அதற்கென அவர்கள் ஒரு தனி குழுவை அமைத்து இயங்குவது அனைவரும் அறிந்ததே...!!! அப்படி நடக்கும் பட்சத்தில், அதை தனிநபர் தாக்குதலாக மாற்றுவது, சமந்தமில்லாத மற்றும் அருவருப்பான கருத்துகளை பதிந்து எந்த வகையிலும் அது தலை தூக்காமல் பார்த்துக் கொள்வது என்பன போல.....!!! இது தட்ஸ் தமிழிலும் நடக்கிறதோ என்று பல நாட்களாக சந்தேகம்... இதனை விவரம் அறிந்தவர்கள் எளிதில் ஊகிக்க முடியும். இதையும் நான் பலமுறை 'தட்ஸ் தமிழ்' கருத்துப் பகுதியில் சுட்டிக் காட்டிவிட்டேன். அதன் பிறகு தான் எனது பெயரை களவாடி கண்றாவி கருத்துக்கள் அதிக அளவில் பதியப் பட்டன. நானும் பல நாள் எதிர்பார்த்ததுண்டு... 'இப்படி' பட்ட கண்றாவியான களத்தில் இருந்து வெளிப்பட்டு, விஷயம் உள்ள தோழர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்வது எப்போது என்று...!!!

    ReplyDelete
  33. நண்பர் மா பொன்ராசு அவர்கள் சொல்வதைப்போல் நான் யாரிடமும் எனக்காக போராடுங்கள் என்று கேட்கவில்லை. இத்தனை வருடங்கள் எத்தனை எத்தனையோ அசிங்கமான அவதூறான கருத்துக்கள் புலி எதிர்ப்பு கருத்துக்களுக்கு பதிலாக பதியும்போது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களுடைய பெயரில் போலிகள் புலி எதிர்ப்புக் கருத்துகளை பதியும் போது மட்டுமே உங்களுக்கு ஆவேசம் வந்தது ஏன் எனபது மட்டுமே எனது கேள்வி. ஒரு வேளை உங்களது பெயரில் போலிகள் புலி ஆதரவு கருத்துக்களை நாகரீகமற்ற முறையில் சொல்லி இருந்தாலும் நீங்கள் அமைதியாகத்தான் இருந்திருப்பீர்களோ என்று எண்ணத் தோனுகிறது. எது எப்படியாயினும் Thats Tamil இணையம் பதிவுப் பெயர் மற்றும் சங்கோத வார்த்தைகளைக் கொண்டு வாசகர்களின் தனித்தன்மையை காப்பாற்றுமாயின் எனக்கு சந்தோசமே. உங்களின் முயற்சி பலனளிக்குமானால் பயனாளிகளில் ஒருவனாக நானும் இருப்பேன் என்பது நிச்சயம்

    ReplyDelete
  34. நண்பர் அன்பு அவர்களுக்கு...முல்லை முல்லால்தான் எடுக்கவேண்டும் என்ற பழமொழி நிச்சயம் எல்லா விடயங்களிலும் எல்லா இடங்களிலும் உபயோகிக்கலாம் என்ற உங்கள் கருத்தில் இருந்து நான் வேறுபடுகிறேன். தூசனத்திற்கு தூசனம் நிச்சயமாக மாற்று கிடையாது. தூசிப்பது எனபது ஒவ்வொருவனின் எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடே. ஆக தூசனர்கள் தூசிக்கும் போது அவற்றை புறம் தள்ளி நம் வழக்கமான கருத்துக்களை பதிய வேண்டியதே நம் போல் உள்ளோரின் பொறுப்பு. மற்றைய படி தூசணக் கருத்துக்களை தணிக்கை செய்யாது பதிவு செய்ய அனுமதிக்கும் Thats Tamil இணையத்தில் கருத்து பதிவு செய்து Thats Tamil இணையத்தை ஊக்குவிக்க வேண்டாம் என்ற உங்களின் கருத்துக்கு Hats Off

    ReplyDelete
  35. நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.. தட்ஸ்தமிழை பற்றி மட்டும்தான் இங்கு நாம் விவாதம் செய்ய வேண்டுமா அல்லது தட்ஸ்தமிழ் வெளியிடப்பட்ட செய்தி அல்லது உலகில் நடக்கும் சம்பவங்களை குறித்தும் விவாதம் செய்யலாமா.?

    சமீபத்தில் லண்டனில் வைத்து வீக்கிலீக்ஸ் நிறுவனர் "ஜூலியன் அசாங்கே" என்பவரை உப்பு சப்பில்லாத ஒரு வழக்கிற்க்காக கைது செய்தது.. நேற்று லன்டனில் உள்ள கோர்ட்டில் அவருக்கு ஜாமின் கொடுக்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கிருந்த மக்கள் சிறிய போராட்டம் நடத்தினார்கள் (அவர்களுடன் நானும் இருந்தேன் என்பதில் எனக்கு சிறிய மகிழ்ச்சி)..இப்போது அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்திய போக்கு குறித்து நண்பர்களின் கருத்துக்கள் என்ன..?

    ஜீலியன் அசாங்கே செய்த்து சரியா தவறா..?
    அமெரிக்கா இந்த நடவடிக்கைய நன்பர்கள் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்..?

    ReplyDelete
  36. கொளத்தூர் கொள்ளணை பற்றி பேசுங்கள்! பரப்புங்கள்!!
    தமிழகம் சந்திக்கும் காவிரிச் சிக்கலுக்கு அதிரடியான ஒரு தீர்வு இது! தமிழர்களம் முன்வைக்கும் இத் திட்டம் குறித்து ஆக்கபூர்வமாகத் திறனாய்வு செய்யுங்கள்! தொய்வின்றித் தொடர் பரப்புரை செய்யுங்கள்! இணையத்தில் செய்திகளைப் பாருங்கள். திட்டத்தை நிறைவேற்ற அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்மென்றால் கொள்ளணைத் திட்டம் பரவலாக மக்கள் நடுவில் எடுத்துச செல்லப்பட வேண்டும்.
    அரிமா


    http://www.kolathoorkollanai.blogspot.com

    ReplyDelete