Wednesday, December 22, 2010

சீமான் இளங்கோவன் கருத்துரையாடல் - பாகம் 1

சீமானுக்கும், இளங்கோவனுக்கும் இடையே நடக்கும் கற்பனை உரையாடல்:

சீமான்: எதிரியா இருந்தாலும் வணக்கம் சொல்றது தமிழனோட பண்பாடு. வணக்கம் இளங்கோவன் அவர்களே...!!!

இளங்கோவன்: வணக்கம் 'செபாஸ்டியன் சைமன்' என்கிற சீமான் அவர்களே...!!

சீமான்: சுளீர் சார்பா உங்களை பேட்டி எடுக்க வந்துள்ளேன்.

இளங்கோவன்: சொல்லுங்க...

சீமான்: முத்துகுமார் எதுக்கு செத்தான்னு உங்களுக்கு தெரியுமா?

இளங்கோவன்: யார் அந்த முத்துகுமார்? குவாத்ரோச்சியோட மவனா? இல்லை, ஆண்டர்சனோட கசின் பிரதரா?

சீமான்: ஈழத்துக்காக கொளுத்திகிட்டு செத்தானே..அந்த முத்துகுமார்...!!!

இளங்கோவன்: ஒ..ஐ..சீ... தற்கொலை செய்வது கோழைத் தனம். அவன் பண்ணின மடத்தனத்துக்கு தியாகி பட்டம் வேற....

சீமான்: உண்மை தான். முத்துகுமார் மடையன் தான். அதனால தான் அவன் தன்னை கொளுத்திகிட்டான். இல்லைன்னா உங்களை மாதிரி ஆளுங்களை இல்லை கொளுத்தியிருப்பான். அப்போ அவனை 'தியாகி'ன்னு சொல்லியிருப்பீங்களா? ஆண்டர்சன், ராசா, குவத்ரோச்சி மாதிரி?

இளங்கோவன்: (முழிக்கிறார்) இந்த கேள்வி கடினமா இருக்கு.    பாஸ்....!!!

சீமான்: ஈழத்துக்காக, அந்த மக்களுக்காக தன்னை கொளுத்திகிட்டு செத்தானே, அங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?

இளங்கோவன்: 30 வருட புலிகளோட பயங்கரவாத ஆட்சி அகற்றப் பட்டு, இப்போது தான் அங்கு அமைதி திரும்பியிருக்கிறது.

சீமான்: உங்க பதிலில் ஒவ்வொரு வரியை அலசுவோம்....!!! '30 வருட ஆட்சி'.... இந்த வரிகளுக்கு வருகிறேன். 30 வருடங்களுக்கு முன்பு ஈழ மக்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

இளங்கோவன்: அப்படி சொல்ல வரவில்லை. 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, புலிகளின் ஆட்சியில் ஈழ மக்கள் அதிக அளவில் துன்பப்பட்டனர் என்று சொல்ல வந்தேன்.

சீமான்: ஆக, 30 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈழ மக்கள் துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இல்லையா?

இளங்கோவன்: (முழிக்கிறார்)...ஆ..மா.ம்..!!!

சீமான்: சரி... புலிகளின் ஆட்சியில் மக்கள் அதிக துன்பப் பட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் உண்டு?

இளங்கோவன்: 100 ரூபாய்க்கு விற்கப் பட்ட தீப்பெட்டி, 1000 விற்கப் படும் சர்க்கரை, இரண்டு தலைமுறையாக மின்சாரத்தையே பார்த்திராத மக்கள்... இவையெல்லாம் தான்...!!

சீமான்: புரியவில்லை. புலிகள் பொருட்களை அதிக விலை கொடுத்து விற்றார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

இளங்கோவன்: இல்லை. அங்கு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப் பட்டன.

சீமான்: ஏன் அப்படி?

இளங்கோவன்: காரணம், பொருள் தட்டுப் பாடு.

சீமான்: எதனால் பொருள் தட்டுப் பாடு?

இளங்கோவன்: (எச்சில் விழுகுங்குகிறார்)

சீமான்: காரணம், இலங்கை சிங்கள அரசு ஏ 9 நெடுஞ்சாலையை மூடியது மட்டும் இல்லாமல், பொருளாதார தடையை விதித்தது. சரி தானே? புலிகள் இயக்கத்தில் உள்ள எவருக்கும் சம்பளம் இல்லை என்று உங்களுக்கத் தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல புலிகள் ஆட்சியில் மக்கள் அதிக துன்பப் பட்டார்கள் என்றால் இயக்கத்தில் சேர பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டியது ஏன்? ஆக உங்கள் கூற்றுப் படி புலிகள் மக்களை வேதனைப் படுத்தினார்கள் என்பது தவறு. இல்லையா?

இளங்கோவன்: (தலையை சொறிகிறார்)
                                                                                                                           (தொடரும்)

No comments:

Post a Comment