Wednesday, December 22, 2010

சீமான் இளங்கோவன் கருத்துரையாடல் - பாகம் 1

சீமானுக்கும், இளங்கோவனுக்கும் இடையே நடக்கும் கற்பனை உரையாடல்:

சீமான்: எதிரியா இருந்தாலும் வணக்கம் சொல்றது தமிழனோட பண்பாடு. வணக்கம் இளங்கோவன் அவர்களே...!!!

இளங்கோவன்: வணக்கம் 'செபாஸ்டியன் சைமன்' என்கிற சீமான் அவர்களே...!!

சீமான்: சுளீர் சார்பா உங்களை பேட்டி எடுக்க வந்துள்ளேன்.

இளங்கோவன்: சொல்லுங்க...

சீமான்: முத்துகுமார் எதுக்கு செத்தான்னு உங்களுக்கு தெரியுமா?

இளங்கோவன்: யார் அந்த முத்துகுமார்? குவாத்ரோச்சியோட மவனா? இல்லை, ஆண்டர்சனோட கசின் பிரதரா?

சீமான்: ஈழத்துக்காக கொளுத்திகிட்டு செத்தானே..அந்த முத்துகுமார்...!!!

இளங்கோவன்: ஒ..ஐ..சீ... தற்கொலை செய்வது கோழைத் தனம். அவன் பண்ணின மடத்தனத்துக்கு தியாகி பட்டம் வேற....

சீமான்: உண்மை தான். முத்துகுமார் மடையன் தான். அதனால தான் அவன் தன்னை கொளுத்திகிட்டான். இல்லைன்னா உங்களை மாதிரி ஆளுங்களை இல்லை கொளுத்தியிருப்பான். அப்போ அவனை 'தியாகி'ன்னு சொல்லியிருப்பீங்களா? ஆண்டர்சன், ராசா, குவத்ரோச்சி மாதிரி?

இளங்கோவன்: (முழிக்கிறார்) இந்த கேள்வி கடினமா இருக்கு.    பாஸ்....!!!

சீமான்: ஈழத்துக்காக, அந்த மக்களுக்காக தன்னை கொளுத்திகிட்டு செத்தானே, அங்க என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?

இளங்கோவன்: 30 வருட புலிகளோட பயங்கரவாத ஆட்சி அகற்றப் பட்டு, இப்போது தான் அங்கு அமைதி திரும்பியிருக்கிறது.

சீமான்: உங்க பதிலில் ஒவ்வொரு வரியை அலசுவோம்....!!! '30 வருட ஆட்சி'.... இந்த வரிகளுக்கு வருகிறேன். 30 வருடங்களுக்கு முன்பு ஈழ மக்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

இளங்கோவன்: அப்படி சொல்ல வரவில்லை. 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, புலிகளின் ஆட்சியில் ஈழ மக்கள் அதிக அளவில் துன்பப்பட்டனர் என்று சொல்ல வந்தேன்.

சீமான்: ஆக, 30 வருடங்களுக்கு முன்பிருந்தே ஈழ மக்கள் துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இல்லையா?

இளங்கோவன்: (முழிக்கிறார்)...ஆ..மா.ம்..!!!

சீமான்: சரி... புலிகளின் ஆட்சியில் மக்கள் அதிக துன்பப் பட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் உண்டு?

இளங்கோவன்: 100 ரூபாய்க்கு விற்கப் பட்ட தீப்பெட்டி, 1000 விற்கப் படும் சர்க்கரை, இரண்டு தலைமுறையாக மின்சாரத்தையே பார்த்திராத மக்கள்... இவையெல்லாம் தான்...!!

சீமான்: புரியவில்லை. புலிகள் பொருட்களை அதிக விலை கொடுத்து விற்றார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

இளங்கோவன்: இல்லை. அங்கு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப் பட்டன.

சீமான்: ஏன் அப்படி?

இளங்கோவன்: காரணம், பொருள் தட்டுப் பாடு.

சீமான்: எதனால் பொருள் தட்டுப் பாடு?

இளங்கோவன்: (எச்சில் விழுகுங்குகிறார்)

சீமான்: காரணம், இலங்கை சிங்கள அரசு ஏ 9 நெடுஞ்சாலையை மூடியது மட்டும் இல்லாமல், பொருளாதார தடையை விதித்தது. சரி தானே? புலிகள் இயக்கத்தில் உள்ள எவருக்கும் சம்பளம் இல்லை என்று உங்களுக்கத் தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வது போல புலிகள் ஆட்சியில் மக்கள் அதிக துன்பப் பட்டார்கள் என்றால் இயக்கத்தில் சேர பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டியது ஏன்? ஆக உங்கள் கூற்றுப் படி புலிகள் மக்களை வேதனைப் படுத்தினார்கள் என்பது தவறு. இல்லையா?

இளங்கோவன்: (தலையை சொறிகிறார்)
                                                                                                                           (தொடரும்)

Sunday, December 5, 2010

தட்ஸ் தமிழ் செய்தி ஊடகம் 'காவாலிகளின்' கூடாரமா?!

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துகளும், சம்பவங்களும் கற்பனை அல்ல; ஒரு சிலருடைய மனதை புண்படுத்துவதற்காகவே இந்த பதிவு எழுதப்படுகிறது.

இந்த பதிவு 'தட்ஸ்தமிழில்' பிரசுரிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்வது பற்றியது அல்ல. அத்தகைய செய்திகளுக்கு வாசகர்கள் என்ற பெயரில் ஒரு சில கருங்காலிகள் அடிக்கும் கொட்டம் பற்றியும், அவர்கள் போடும் நாகரிகமற்ற, வக்கிரமான ஆட்டங்களுக்கு 'தட்ஸ்தமிழ்' ஏற்படுத்தி கொடுத்திருக்கும் வசதிகளை பற்றியும் அதன் வாசகர்களுக்கு தெரியப்படுத்துவது மட்டுமே..!  "உனக்கு எதற்கு அக்கறை, ஊரில் எவனுக்கும் இல்லாத அக்கறை" என்று உங்களில் யாரோ கேட்பது காதில் விழுகிறது. 'நானே பாதிக்கப் பட்டேன். நேரடியாக பாதிக்கப் பட்டேன்' என்கிற முறையில் என்னுடைய இந்த பதிவில் வரும் கருத்துக்கள் 'சுளீர்' என்று இருக்கலாம். வார்த்தைகள் வலித்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.. அன்பர்கள் பொருத்தருள வேண்டுகிறேன்.

இந்த பதிவின் நோக்கம்:
நான் பல நாட்களாக 'தட்ஸ்தமிழில்' கருத்தெழுதி வரும் வாசகன். குறிப்பாக ஈழம் சார்ந்த பதிவுகளில் (ம.பொன்ராஜ்) என்ற எனது பெயரினைப் பார்க்கலாம்; அந்த கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல், சிலர் செய்த விஷமத்தனமான செயலே இந்த பதிவினை எழுதத் தூண்டியது. எனது நண்பனின் ஈமச்சடங்கில் கலந்து கொண்டிருந்த நேரம், யாரோ சிலர் எனது பெயரில் அதே நேரத்தில் பல கருத்துகளை (நான் முரண்படும் கருத்துகள் அவை) எழுதி உள்ளதை பார்த்து ஆச்சரியமும், கோபமும் கொப்பளித்தது. காரணம் இது கருத்தெழுதும் பதிவர்களிடையே காணப்படும் குறைந்த பட்ச நாகரிகத்தினையும் கேள்விக்குறியாக்குவது மட்டுமின்றி, "அது என்னுடைய கருத்து அல்ல" என்று நிராகரிக்கும் வாய்ப்பு கூட எனக்கு இல்லாமல் போய்விட்டதே முக்கிய காரணம். (இது மாதிரி எத்தனை தடவை தாங்க நானும் 'என்னோடது இல்ல.. நான் எழுதல'ன்னு சொல்லிக்கிட்டு இருக்க முடியும்..?  :-))


குறைபாடுகள்:
1) பெரும்பாலான செய்தி ஊடகங்களில் கண்டிப்பாக கேட்கப்படும் 'மின்னஞ்சல் முகவரி' இதில் கேட்கப்படுவதில்லை. எனவே அவதூறான கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டும் வாய்ப்பு 'தட்ஸ் தமிழுக்கு' கிடையாது.

2) ஒரு வாசகரினை போல இன்னொரு வாசகர் கருத்தெழுதி 'ஏமாற்று வேலை' செய்யாமல் தடுக்க, பல செய்தி ஊடகங்கள் 'வாசகரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, சங்கேத வார்த்தை(பாஸ் வேர்டு)' போன்ற விஷயங்கள் பதிவு செய்யப் பட்டு, ஒவ்வொரு முறையும் அது சரிபார்க்கப் படும். 'தட்ஸ்தமிழில்' இந்த வழக்கமே கிடையாது. எனவே யார் வேண்டுமென்றாலும், யாருடைய பெயரிலும், (ம. பொன்ராஜ் என்ற என்னுடைய பெயரில் நீங்கள் கூட முயற்சி செய்து பாருங்கள்...!!! ஏற்கனவே பய புள்ளைங்க புண்ணியத்தால அப்படி நிறைய கருத்துகள் இன்னும் ஓடிக் கிட்டு இருக்கு....), என்ன கருத்துகளை வேண்டுமானாலும் (அது ஆபாசமாகவே, அருவருப்பாகவோ, எதிர் கருத்தாகவோ கூட இருக்கலாம்) பதிய முடியும்.  கருத்து எழுதும் பகுதியில் எந்த ஒரு ஊடகமும் தனது வாசகர்களுக்கு செய்யக் கூடாத ஒரு துரோகம் இது. இதில் 'தட்ஸ்தமிழ்' எந்த அளவிற்கு கோட்டை விட்டுள்ளது என்று பாருங்கள்?

விளைவுகள்:
1) 'இனிமே இந்த பக்கமே வரமாட்டேண்டா... அப்படி வந்தாலும் கருத்தெழுத மாட்டேண்டா....!' என்று சூடம் அணைத்து சத்தியம் செய்து வெளியேறிய நல்ல விவாதக்காரர்கள் குறைந்தது 'ஆயிரம்' பேர்.  நான் 'ஆயிரத்தில் ஒருவன்'.

2) குறிப்பாக ஈழம் சார்ந்த கருத்துகள் வரும்போது இந்த கருங்காலிகள் 'ஓவர் டைம் டியூட்டி' பார்ப்பது பலருக்குத் தெரியும். நான் உட்பட பல நபர்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தும் போது சம்பந்தப் பட்டவர்கள் "நான் அவன் அல்ல." என்று தன்னிலை விளக்கம் கொடுத்து கொடுத்தே கண்ணைக் கட்டியது தான் மிச்சம்.

தட்ஸ்தமிழ் நிர்வாகத்தாரிடம் இருந்து எதிர் பார்ப்பது:
1 )கருத்துப் பகுதியில் 'அவதூறு குறித்து தகவல் தர'  என்ற பொத்தானை எத்தனை முறை அமுக்கினாலும் அது வேலை செய்யவில்லை. கொஞ்சம் சரிபார்க்கலாமே....!!!

2 ) வாசகர்களின் தனித்தன்மை காக்க, 'பயனாளர் பெயர், மின்னஞ்சல் முகவரி, சங்கேத வார்த்தை' போன்றவற்றை பதிவு செய்து, வாசகர்கள் உள்நுழைந்த பிறகு மட்டுமே (லாக் இன்) கருத்தெழுத அனுமத்திக்க வேண்டும். இவை எதுவும் சாத்தியமில்லை என்று நிர்வாகம் கருதினால் 'கருத்து பகுதியையே' நீக்கி விடலாமே?.

3 ) கருத்துகளை நெறியாள்கை செய்யவும், அருவருக்கத் தக்க கருத்துகளை கண்டிக்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை யாவும் 'தட்ஸ்தமிழ்' மீது கொண்ட அக்கறையே அன்றி, வேறொன்றும் இல்லை பராபரமே....!!!

4) மேற்ச்சொன்னவைக்கு நிவாகம் செவிசாய்க்க தவறினால், 'தட்ஸ் தமிழின்' செய்திகள் வேண்டுமானால் நாகரிகமாக இருக்கலாம். ஆனால் அதனுடைய கருத்து பகுதி 'எச்சரிக்கை: கருத்தெழுதும் பகுதி 18 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும்' என்று விவரம் தெரிந்த வாசகர்கள் 'ஏ' சர்டிபிகேட் வெகு விரைவில் கொடுத்துவிடுவார்கள்.

'தட்ஸ் தமிழ்' நிர்வாகத்திற்கு நேரடியாக ஒரு மின்னஞ்சல் இது குறித்து அனுப்ப உள்ளேன். அது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில்......!!


அதுவரை வணக்கம் கூறாமல் செம 'காண்டு'டன்  விடை பெறுவது,
சுளீர்


பிற்சேர்க்கை:
'தட்ஸ்தமிழ்' வலைப் பக்கத்தை நிர்வகித்து வரும் நிறுவனத்தாருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதன் நகல் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. உங்களைப் போல நானும் அவர்களது பதிலுக்கு காத்திருக்கிறேன்.

************************
From: Ponraj Mathialagan
To:     inquiries@greynium.com
Date:  Mon, Dec 6, 2010 at 12:29 PM
Subject: Complaint about 'thats thamil' and its comments section

Hi sir/madam

I am one of the readers of 'thats thamil'. I like 'thats thamil' because of its up-to-date news and events. Comments section on every online media is vital to show the quality of the readers. Obviously comments will throw more light on the topics and should give the readers a place to have a healthy discussion too. Hope you agree with me. But I strongly disagree with 'thats thamil' on this. To be frank, if the new reader has a look at the comment page, he/she will immediately reconsider to visit 'thats thamil' again. This is not good for 'thats thamil' and its fame. Please do necessary steps to make the comments section as nice as possible and give the readers security and comments moderation as well. Please visit my blog 'http://suleer.blogspot.com' to know more details.


Regards
Ponraj M
************************